புதன், நவம்பர் 16, 2011

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

TNPTF - ஆசிரியர் சங்க நண்பன்: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்: சிங்கம்புணரி, நவ. 15: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார அலுவலக...

வியாழன், நவம்பர் 03, 2011

TNPTF SVG Aarpattam ( 3.11.2011)





மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்துக்கு...

விழுப்புரம், அக்.25: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ. குப்புசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்துக்காக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மேல்நிலை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வுக்கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தை கருவூலத்தில் செலுத்த வேண்டிய நாள் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையாகும்.  தேர்வுக்கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ரூ. 300-ஐ கருவூலத்தில் செலுத்தியமைக்கான அசல் கருவூல சலான், தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் பட்டியல், தேர்வுக்கட்டண விலக்குக்கு தகுதியானோர் பெயர் பட்டியல் இனவாரியாக தட்டச்சு செய்த மூன்று நகல்களை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மேலும் 12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் சார்ந்த பிற்சேர்க்கை படிவம் இரண்டு நகல்கள் ஆகியவற்றை நவம்பர் 1-ம் தேதி முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தலைமை ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனவரி 29ல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

சி.பி.எஸ்.இ.யால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான சி.டி.இ.டி. 2012ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்வெழுத விரும்புவோர் இரண்டு முறைகளில் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட வங்கிகளில் (சிண்டிகேட் வங்கி அல்லது பிற வங்கிகளில்) சிபிஎஸ்இ கல்வி நிறுவனத்தின் கணக்கிற்கு பணத்தை செலுத்தி விதிமுறைகள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
சிடிஇடி இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பாக அனைத்து தகவல்களையும் மாணவர்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30ம் தேதியாகும்.
மத்திய அரசால் நடத்தப்படும் கேவிஎஸ், என்விஎஸ் போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித் தேர்வாக நடத்தப்படும் சி.டி.இ.டி. தேர்வினை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் செயல்படும் சுயநிதி பள்ளிகளிலும் இத்தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அவ்வளவு முக்கியத்துவம் பெறும் இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நடத்தப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளான துபாய், ரியாத் ஆகியவற்றிலும் இந்த தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
2011 ஜுன் மாதம் நடைபெற்ற சிடிஇடி தேர்வெழுத 7,94,080 பேர் விண்ணப்பித்தனர். இதில் 7,15,050 பேர் தேர்வெழுதினர். இந்தியாவில் மட்டும் 1,178 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வெழுதியவர்களில் வெறும் 97,919 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.