வியாழன், நவம்பர் 03, 2011

ஏ.இ.இ.ஓ., பணிக்கான தேர்வு: சிவகங்கையில் விண்ணப்பம்

சிவகங்கை:""உதவி தொடக்க கல்வி அலுவலர் எழுத்து தேர்விற்கான விண்ணப்பம் நாளை முதல் சிவகங்கையில் பெறலாம்,'' என, முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தெரிவித்தார்.மாநிலத்தில் காலியாக உள்ள 34 உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிக்கென, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 ஜன.,8ம் தேதி எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பம் முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (நவ.,4) முதல் நவ.,19 வரை வினியோகம் செய்யப்படும். விண்ணப்பம் வேண்டுவோர் 50 ரூபாய் செலுத்தி பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர் தேர்வு கட்டணமாக 150; பிற வகுப்பினர் 300 ரூபாய்க்கு "ஆசிரியர் தேர்வு வாரியம்' சென்னை -6 என்ற முகவரிக்கு "டிடி' எடுத்து, இணைத்து முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கவேண்டும்.

விண்ணப்பத்தை பெறவோ, திரும்ப செலுத்தவோ நேரடியாக வர வேண்டும். தபால் மூலம் அனுப்பக்கூடாது. "டிடி'.,யை பாரத ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி கிளைகளில் மட்டுமே எடுக்கவேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி எழுத்து தேர்வு 2012ம் ஆண்டு ஜன.,8ம் தேதி நடக்கிறது. என்றார்.