வியாழன், நவம்பர் 03, 2011

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்துக்கு...

விழுப்புரம், அக்.25: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ. குப்புசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்துக்காக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  மேல்நிலை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வுக்கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தை கருவூலத்தில் செலுத்த வேண்டிய நாள் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையாகும்.  தேர்வுக்கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ரூ. 300-ஐ கருவூலத்தில் செலுத்தியமைக்கான அசல் கருவூல சலான், தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் பட்டியல், தேர்வுக்கட்டண விலக்குக்கு தகுதியானோர் பெயர் பட்டியல் இனவாரியாக தட்டச்சு செய்த மூன்று நகல்களை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மேலும் 12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் சார்ந்த பிற்சேர்க்கை படிவம் இரண்டு நகல்கள் ஆகியவற்றை நவம்பர் 1-ம் தேதி முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தலைமை ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.